பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

பெங்களூர் அணி 9 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள நிலையில் 6 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து என்று 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் கொல்கத்தாவை பெங்களூர் அணி; வீழ்த்தினால், பிளே-ஓவ் சுற்றுக்கான வாய்ப்பை உறுதியாக தக்கவைத்துக்கொள்ள முடியும்.

கொல்கத்தா அணி இதுவரை 5 போட்டிகளில் வெற்றியையும், 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 82 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இன்று பெங்களூரை வீழ்த்தி தோல்விக்கு கொல்கத்தா பழிதீர்க்குமா என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!