கணவனால் தீ மூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கணவனால் தீ மூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெற்ற பிள்ளையின் கண்முன்னே கட்டிய மனைவி மீது எண்ணை ஊற்றித் தீ மூட்டிய நிலையில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் அராலி கிழக்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 32 வயதுடைய சண்முகநாதன் – அரிது என்ற இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் கடந்த 30ம் திகதி வீடு திரும்பிய கணவர் இரவு 10 மணியளவில் உணவிற்காக மனைவியை அழைத்ததோடு கடுமையாக தாக்கியுள்ளார்.

இதன்போது தலையில் தாக்கப்பட்டதனால் மனைவி மயக்கமடைந்து வீழ்ந்ததாகவும், இதன்போது மனைவி மீது மண்னெண்ணை ஊற்றி தீ முட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த 14 வயது மகன் ஓடிச் சென்று தீயை அணைக்க முயன்றபோதும் மகனை தடுத்துள்ளார்.

இதன்போது தந்தையின் கையை கடித்து தந்தையின் பிடியில் இருந்து தப்பிய மகன் ஓடிச் சென்று நீரை ஊற்றி தாயில் பரவிய தீயை அணைத்தார்.

இதனை அடுத்து அயலில் உள்ள மாமனின் உதவியுடன் தாயாரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த நான்காம் திகதி இரவு 11.30 மணியளவில் குறித்த இளம் குடும்பப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!