உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அழைக்கப்படவுள்ளாரென அறியமுடிகின்றது.
முன்னதாக இந்த தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பலர் முன்னைய அரசு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு உதவிகள் வழங்கியதாகவும் இஅப்போது பாதுகாப்பமைச்சில் இருந்து அவருக்கு அனுசரணைகள் கிடைத்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயவே அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோட்டபாயவை தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கக் கோரி அழைப்பு விடுக்கப்படவுள்ளது.(சி)