ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா!

13ஆவது ஐ.பி.எல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றியீட்டியுள்ளது.

நாணயற்சுழற்சியில் வெற்றியீட்டிய ராஜஸ்தான் ரோயஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா, 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
175 என்ற வெற்றியிலக்கு நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கொல்கத்தாவின்
பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது தடுமாறியது.

20ஆவது பந்துப்பரிமாற்ற நிறைவில் 9 இலக்;குகளை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
37 ஓட்டங்களால் கொல்கத்தா அணி வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் இவ்வாண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் தனது 2 ஆவது வெற்றியையும் கொல்கத்தா அணி பதிவு செய்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!