கிளிநொச்சி இளைஞன் கேரளக் கஞ்சாவுடன் திருகோணமலையில் கைது!

4 கிலோ 65 கிராம் கேரளா கஞ்சாவுடன், திருகோணமலை கிண்ணியா வைத்தியசாலைக்கு அருகில் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப் பொருளை கொண்டு வருவதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கிண்ணியா வைத்தியசாலைக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 04 கிலோ 65 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் எனவும் தெரியவருகின்றது.

சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!