17 இலட்சமாக இருந்த வறுமைப்பட்டோர் எண்ணிக்கை, இந்த அரசாங்கத்தில் 6 இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
1995ம் ஆண்டு 17 இலட்சம் வறுமைப்பட்டோரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக நாம் சமுர்த்தி செயற்திட்டத்தினை ஆரம்பித்திருந்தோம்.
ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பிற்பாடு, வறுமைப்பட்டோரின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தினால் மேலும் அதிகரித்துள்ளதை காண முடிகின்றது.
இந்த ஆண்டில் மேலும் இரண்டு இலட்சம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து, அவர்களையும் இணைத்துக் கொள்ள இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
வறுமையை இல்லாமல் செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தித்திட்டம், இந்த அரசாங்கத்தின் காலத்தில் மீண்டும் அதிகரித்துள்ளதை காண முடிகின்றது.
மேலும் பலரை வறுமைக்கு உட்படுத்தி சமுர்த்தித் திட்டத்தில் இணைப்பதுதான் இந்த அரசாங்க காலத்தில் நடந்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார். (சி)