மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடைவிதித்து, உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில், ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் அறிவித்திருந்தார்.
குறித்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனு மீதான வழக்கின் விசாரணை, 3 நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின் பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றும் செயற்பாட்டுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம், எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை குறித்த தடை உத்தரவு இருக்கும் என அறிவித்துள்ளது. (சி)