இலங்கையில் சனத்தொகை வீதசாரத்தினை சமநிலையில் பேணுவது அவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது மாறிவரும் இன, மத அடிப்படையிலான மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் 2050 ஆம் ஆண்டினை நாம் அடையும்போது இனரீதியில் சனத்தொகையில் பாரிய மாறுதல் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடாத்திய ஊடகசந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட எஸ்.பி.திஸ்ஸாநாயக்க,
இந்த சுத்தமான பூமியில் அகிம்சையை கடைப்பிடிக்கும் பௌத்த மக்கள், அப்பாவி முஸ்லீம், இந்து மக்கள், கிறிஸ்தவ மக்கள் வாழும் இந்நாட்டில் அவரவர் மதங்களின் விகிதாசாரத்தினை பாதுகாத்துக் கொள்வது அவசியமானது.
பௌத்தர்கள் தமது மூலஸ்தானமாக பார்ப்பது எமது இலங்கைத் திருநாட்டை.
தற்போதுவரையில் பௌத்தர்கள் நூற்றுக்கு 70வீதமானவர்களாக இருக்கின்றார்கள்.
இந்துக்கள் 12.06 வீதம் இருக்கின்றார்கள்.
இஸ்லாம் மத்தினை பின்பற்றுபவர்கள் 9.7 வீதம் உள்ளனர்.
கிறிஸ்தவ மத்தினை பின்பற்றுபவர்கள் 7.6 வீதம் உள்ளனர்.
இனரீதியாக பார்க்கும்போது சிங்களவர்கள் 75 வீதமானவர்களாகவும், இலங்கைத் தமிழர்கள் 11.2 வீதமாகவும், இந்தியத் தமிழர்கள் 4.1 வீதமாகவும், இலங்கை முஸ்லீம்கள் 9.3 வீதமாகவும், வேறு இனத்தவர்கள் நூற்றுக்கு 0.05வீதமாகவும் இருக்கின்றார்கள்.
இந்த விகிதாசாரத்தினை தொடர்ந்து பேண வேண்டுமானால் அரசாங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் தீர்க்கமான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும்.
சனத்தொகை அதிகரிப்பை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
வெளியிலிருந்து முஸ்லீம்கள் நாட்டுக்குள் குடியேறுவதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஒரு குடும்பத்தில் மூவர் இருக்கலாம் அல்லது ஐவர் இருக்கலாம் அதற்கான திட்டங்கள் செய்யப்படவேண்டும் இல்லையேல் 2050ம் ஆண்டு வரும்போது இந்த வீதாசாரத்தில் பாரிய வித்தியாசம் ஏற்பட வாய்ப்பிருகிக்கின்றது என்று எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். (நி)