அமெரிக்காவில் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

லொஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் வடகிழக்கு பகுதியிலிருந்து 182 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் உணரப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!