அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத் திட்டத்தின் கீழ், அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்பகூடம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் சுமார் ஐந்து கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி தொழில் நுட்பகூடம் திறந்த வைக்கும் நிகழ்வு அதிபர் அன்வர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கட்டுகஸ்தோட்டை கல்வி வலய அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். (நி)