தீவிரவாத செயற்பாடுகளில் தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில் குருநாகல் டாக்டர் ஷாபியை தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது முறையல்லவென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாதுகாப்பமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டாக்டர் ஷாபி 1978 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 9 (1) பிரிவின் கீழ் கடந்த மே 27 ஆம் திகதி முதல் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் மீது தீவிரவாத விடயங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இல்லாதபடியால் அவர் மீதான தடுப்புக்காவலை இரத்துச் செய்வதே நல்லதென சி ஐ டி பாதுகாப்பு செயலருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த விடயத்தை கடந்த 27 ஆம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் சி ஐ டி பாதுகாப்பமைச்சிடம் சுட்டிக்காட்டியுள்ளது.