வவுனியா பாடசாலையொன்றில் தீ!

வவுனியா ஈரப்பெரிகுளம் அலகல்ல வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ பரவலால் பாடசாலை மைதானம் எரிந்துள்ளது.

இன்று மதியம் 12 மணியளவில் பாடசாலைக்கு அருகே காணப்பட்ட வெற்றுக்காணிக்கு வைக்கப்பட்ட தீயானது காற்றினால் பரவி அருகிலுள்ள பாடசாலை மைதானத்திற்குள் சென்றுள்ளது.

இதனால் பாடசாலை மைதானத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

பாடசாலை அதிபரினால் வவுனியா நகரசபை தீ அணைக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற தீ அணைக்கும் பிரிவினர் தமது முயற்சியினால் தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!