வவுனியாவில் அதிசயமான வாழைக்குலை

வவுனியாவில் அதிசயமான வாழை மரம் ஒன்று பொத்தி வர முன்பே வாழைக்குலை வெளியே தெரிவதைப் பார்வையிடுவதற்கு மக்கள் சென்று வருகின்றனர்.

வவுனியா கல்வியற்கல்லூரி வீதி, அண்ணாநகர், பூந்தோட்டம் பகுதியில் இன்று வீட்டு வளவிலுள்ள வாழை மரம் ஒன்றிலிருந்து விசித்திரமான முறையில் வாழைத்தண்டின் நடுவே பொத்தி வெளியேயும், வாழைக்குலை வெளியேயும் தெரிவதால் இவ் அதிசய நிகழ்வை பர்வையிடுவதற்காக அங்கு மக்கள் சென்று வருகின்றதாக வீட்டின் உரிமையாளர் நாகராசா சுதாகரன் தெரிவிக்கின்றார்.

வழமையாக வாழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம் ஆனால் இன்று இரண்டும் சரிசமனாக வெளியே தெரிகின்றது.

இவ்வாறான அதிசய நிகழ்வுகள் ஆயிரத்தில் ஒன்று தென்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!