வலி வடக்கில் காணிகளை விடுவிக்கும் முயற்சியில் ஆளுநர் சுரேன் ராகவன்

யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ளபொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை
இனங்காணும் நடவடிக்கை, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன் இன்றுஆரம்பமானது.

இந்த 62 ஏக்கர் காணிகளை நான்கு வலயங்களாக பிரித்து, அளவீடு செய்து அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பானநடவடிக்கைகள் இன்றும், நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமையும் இடம்பெறவுள்ளது.

குறித்த பிரதேசத்திற்குள் தமது காணி உள்ளவர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரை தொடர்பு கொள்வதனூடாக, தமது காணிகளைஅடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் என வடக்கு மாகண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!