ஈஸ்டர் தாக்குதல் – தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய தலைமையில் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் மாதம் ஆரம்பிக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரையும் முன்னாள் பிரதமரையும் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டேன் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந் நிலையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களையும் பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றில் இரண்டு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குஙிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!