இலங்கையில் நில அதிர்வு!

கண்டி மாவட்டத்தில், கடந்த 29 ஆம் திகதி காலை 8.32 மணியளவிலும், இன்று காலை 7.06 மணியளவிலும், பல்லேகலையை அண்மித்த பிரதேசங்களில் ஏற்பட்ட நில அதிர்வு, பல்லேகல நில அதிர்வு கண்காணப்பு மத்திய நிலையத்தில், சிறியளவான நில அதிர்வாகப் பதிவாகியுள்ளது.

இவை தவிர, இந்த நில அதிர்வானது, மஹகந்தராவ கண்காணிப்பு மத்திய நிலையத்திலும், கம்பஹா கண்காணிப்பு மத்திய நிலையத்திலும், மிகச் சிறியளவாக பதிவாகியுள்ளதாக, புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி ஏற்பட்ட அதிர்வு, குருதெனிய, பாரகம, அநுரகம மற்றும் மயிலபிட்டி ஆகிய பிரதேச மக்களால் உணரப்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட நில அதிர்வு, அம்பகொட மற்றும் அலுத்வத்த ஆகிய பிரதேச மக்களால் உணரப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக, புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக நிபுணர்கள் 6 பேரைக் கொண்ட இரு குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வுகளின், நிலத்தடி எல்லையை சூழ ஏற்பட்ட அதிர்வலைகள் நில அதிர்வு என்பதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், விக்டோரியா நீர்தேக்கத்தை அண்மித்த பகுதி மற்றும் அந்த நிலப்பரப்பை அண்மித்த ஆழ் நில தட்டுக்களில் ஏற்பட்ட வெடிப்புகள் அல்லது சரிவுகள், இந்த நில அதிர்வுக்கு காரணமாக அமைந்துள்ளதாக, ஆரம்பக் கட்ட எதிர்வுகூறல்கள் வெளிக்கொணர்கின்றன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!