தற்போது ஊடக சுதந்திரம் பேணப்படுகிறதா? – ஹிருணிக்கா!

மேலதிகமான சுதந்திரம், ஊடகத் துறையினருக்கு கிடைக்கப் பெற வேண்டியது அவசியமானதாகும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்குவதா ? அல்லது வைத்திருப்பதா ? அல்லது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த்ததை கொண்டுவருவதா என்பது தொடர்பான விடயங்கள் தற்போது பாரிய அளவில்; பேசு பொருளாக மாறியுள்ளது.

மஹிந்த ஆட்சிக்காலத்தில் பெயரளவில் மாத்திரம் இருந்த ஜனநாயகத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு ஏதுவாக இருந்த சிறந்த முறைமையே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமாகும்.

ஆகவே, இது தொடர்பில் சிந்தித்து செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோல ஊடகத் துறையினருக்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சுதந்திரம் போதுமானது எனநான் கூறவில்லை.

மாறாக இதற்கும் மேலதிகமானசு தந்திரம் ஊடகத்துறையினருக்கு கிடைக்கப் பெறவேண்டியது அவசியமானதாகும்.

இருப்பினும் தற்போது ஊடகத் துறையினருக்கு கிடைக்கப் பெற்றுள்ள சுதந்திரம் அரசியலமைப்பின் ஊடாக கொண்டுவரப்பட்டதேயாகும்.

எமது ஆட்சியில் ஊடக சுதந்திரம் எந்தவகையில் காணப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயமேயாகும்.

தற்போது ஊடகவியலாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த பிண்ணணியை நான் அறியாதமையினால் அது தொடர்பில் பேசவிரும்பவில்லை.

எமது ஆட்சியில் 19 ஆவது அரசியமைப்பு திருத்தின் ஊடாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதுமாத்தரமல்லாது கணக்காய்வு சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

அத்துடன், கொள்முதல் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

19 ஆவது அரசியல் அமைப்பின் ஊடாகவே அரசாங்கம் தோல்வியை சந்தித்ததான கருத்து உண்மைக்கு புறம்பானதாகும்.

ஏனெனில் ஜனாதிபதிக்கும் ,பிரதமருக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே, கடந்த அரசாங்கம் தோல்வியடைந்தது.

ஆகவே,அரசியமைப்பை புறங்கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!