வெடிப்புச் சம்பவம்: ஜக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை பிரஜை உயிரிழப்பு!

ஜக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில், மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜக்கிய அரபு எமிரேடஸ் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான டுபாயில் இரண்டு தனித்தனியாக வெடிப்புச் சம்பவங்களில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

தலைநகரில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இலங்கை பிரஜை ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!