வே.பிரபாகரனைச் சந்திக்க மஹிந்த விரும்பினார்! – எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள, அப்போது ஜனாதிபதியாக இருந்த, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச விருப்பம் வெளியிட்டதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் வடக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதிப்பதற்கு மகிந்த ராஜபக்ச தயாராகயிருந்தார் என்றும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனுடன் மாநாடொன்றை நடத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தன்னிடம் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் என்றும், பிளவுபடாத இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செலுத்துவதற்கு அனுமதிப்பதற்கு தான் தயார் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் எனவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இறுதியுத்தத்தின் போது கப்பல்கள் மூலம் பொதுமக்களை வெளியேற்ற நோர்வே முன்வந்தது என குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து பொதுமக்களையும் விடுதலைப்புலிகளையும் பதிவு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்படும் பெயர்களை உடையவர்களை கண்டுபிடித்து கப்பல் மூலம் தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கான வேண்டுகோளை விடுத்த நிலையில் அதனை பிரபாகரன் நிராகரித்து விட்டதாகவும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!