முல்லைத்தீவில் சட்டவிரோத மரக்கடத்தல்: ஒருவர் கைது

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தேராவில் வனப்பிரதேசத்திற்குரிய வேணாவில் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின்போது, சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்றையும், பெறுமதிவாய்;ந்த முதிரை மரக் குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதி வன வள உத்தியோகத்தர் பீ.சஞ்சீவன் தலைமையில் வன வள உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போதே குறித்த வாகனமும், முதிரை மரக்குற்றிகளும் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!