கடும் மழையால் மன்னாரில் கிராமங்களை சூழ்ந்தது வெள்ளம்!

மன்னார் மாவட்டத்தில் நேற்றும், இன்றும் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக, மாவட்டத்தின் தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக மன்னார் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்றோன் நகர், எமில்நகர், எழுத்தூர் உட்பட பல்வேறு கிராமங்கள் நீரினால் மூழ்கியுள்ளதுடன், மழை நீர் வடிந்து செல்லக் கூடிய விதமாக வடிகால் அமைப்புக்கள், ஒழுங்கான முறையில் பராமரிக்கப்படாமையினால் மழை நீர் அனைத்தும் மக்களின் வீடுகளில் தேங்கியுள்ளது.

அதே நேரத்தில் முன்னாள் பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகஸ்தர்கள் ஆகியோரினால் கால்வாய்களுக்கு அருகில் வழங்கப்பட்ட காணிகள் முற்றிலும் நீரினால் மூழ்கியுள்ளதுடன் மழை நீர் வடிந்தோடவும் தடையாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறித்த நடவடிக்கை தொடரும் பட்சத்தில் மீண்டும் மழை பெய்தால், மக்கள் இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்படும் என்றும்
மன்னார் நகர சபை மற்றும் பிரதேச செயலகம் உடனடியாக குறித்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!