ராஜ்நாத் சிங் ரஸ்யா பயணம்

ரஸ்யா தலைநகர் மாஸ்கோவில் ஷhங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஷ;யாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

3 நாள் பயணமாக அவர் ரஷ;யாவுக்கு செல்லவுள்ளார்.

இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை நிலவி வரும் நிலையில், இந்த மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மாநாட்டில் சீன பாதுகாப்புத் துறை மந்திரியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள், மாநாட்டில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் ரஷ;யா இடையிலான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ரஷ;யா ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோயுகு மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 10ஆம் திகதி நடைபெறவுள்ள ஷhங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை மந்திரிகள் மாநாட்டுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரஷ;யா அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!