தமிழகத்தில் ஆலயங்களை வழிபாடுகளுக்காக திறப்பதற்கு அனுமதி!

இந்தியா தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, ஆலயங்களை வழிபாடுகளுக்குத் திறப்பதற்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் வெளி மாவட்ட மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும், உள்ளூர் பக்தர்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆலயத்துக்கு முன்பாக கைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்து, பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னர் வழிபாடுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாத காலத்திற்கு பின்னர் சுவாமி தரிசனம் செய்தது மன மகிழ்ச்சி தருவதாக பக்தர்கள் ஊடகங்களிடம் தெரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!