20ஆவது திருத்தச் சட்டம் – இன்று அமைச்சரவைக்கு…

19ஆவது திருத்தத்தை நீக்கி, 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் சட்டமூலத்திற்கான பத்திரம், அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.

செப்டம்பர் மாதம் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒக்டோபர் மாத இறுதிக்குள் 20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு முன்னர் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தியுள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் தீவிரம் காண்பித்து வரும் நிலையில், இந்தத் திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய இடமளிக்கப் போவதில்லை என எதிர்த்தரப்பினர் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!