மட்டக்களப்பில் கோர விபத்து! இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளில் ஒன்றுடன் மோதியே விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் புதுக்குடியிருப்பு கந்தசாமி ஆலய வீதியை சேர்ந்த 24 வயதுடைய துலக்ஸன் மற்றும் 20 வயதுடைய நிலுக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தை தொடர்ந்து பொதுமக்களால் பேருந்து தாக்கப்பட்டதுடன், பேருந்து சாரதியும் நடத்துனரும் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!