நாட்டில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 43 பேர் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 92ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 879 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும், தொற்றுக்கு உள்ளான 201 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 54 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!