கொரோனா – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காணப்படுவதால் மக்கள் கட்டாயம் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று இல்லை என்ற நம்பிக்கையால் மக்களில் சிலர் முகக் கவசங்களை அணிவதில்லை.
இது மிக அபாயகரமானது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார், இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் சமூக மட்டத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை.

இந்நிலைமையை தொடர்ந்தும் நாம் பேணவே விரும்புகிறோம்.

ஆனால், கடந்த இரு தினங்களில் புதிய தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள்.

எனினும், இந்த அதிகரிப்பை நாம் சாதாரணமாகக் கடந்து விட முடியாது. மக்களில் சிலர் இப்போது முகக் கவசம் அணிவதில்லை.

அவர்களின் இந்த செயல் பொறுப்பற்றதாகும். இது மிகவும் அபாயகரமானதும் கூட. அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது கட்டாயமானது.

மேலும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர வேண்டும்.

அதற்கு மிகவும் தெளிவான முறைக்கமைய விமானத்தில் ஒரே நேரத்தில் 200 – 300 பேர் வரை அழைத்து வரப்படுகின்றனர்.

விமானத்தினுள் கொரோனா தீவரமாக பரவும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளமையினால், அதனை கட்டுப்படுத்துவதற்காக கட்டுப்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அழைத்து வரப்படவுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!