கொரோனா: இன்றும் 22 பேருக்கு வைரஸ் தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 71 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், இன்று மேலும் 22 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 22 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் 2 ஆயிரத்து 868 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

தொற்றுக்கு உள்ளான 191 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!