நுவரெலியா, கொட்டகலையில் திருட்டு!

நுவரெலியா திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பிரதான நகரில் அமைந்துள்ள தொலைத் தொடர்பு சேவை நிலையம் ஒன்றில், பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் திருடப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒரு இலட்சத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணம் மற்றும் மீள் நிரப்பு அட்டைகள் திருடப்பட்டுள்ளதாக, சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

குறித்த நபர் கோயில் பக்கமாக வந்து பூட்டினை இரும்பு கம்பியால் உடைப்பது, பணம் மற்றும் மீள் நிரப்பும் அட்டைகள் எடுத்துச்செல்லும் காட்சிகள் குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.

அண்மைக் காலமாக கொட்டகலை பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையிலும், இதுவரை எவரும் கைது செய்யப்படாமையினாலும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினர் இணைந்து சம்பவத்துடன் தொடர்புடையோரக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!