ரஸ்யாவில் இளம்பெண்ணில் வயிற்றிலிருந்து, 4 அடி நீளமான பாம்பு மீட்பு

ரஸ்யாவின் லவாசி எனும் கிராமத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பெண் ஒருவரின் வாய் வழியாக 4 அடி நீளமாக பாம்பு உட்சென்ற நிலையில், அதனை வெளியே எடுத்த மருத்துவக் குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

ரஷியாவிலுள்ள லவாசி என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆழ்ந்த தூக்கத்துக்குபின் எழுந்தபோது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதாக உணர்ந்துள்ளார்.

அவரது வயிற்றுக்குள் ஏதோ நுழைந்துள்ளது என்பதை மட்டும் உறுதி செய்துகொண்ட மருத்துவர்கள் வாய் வழியாக எண்டோஸ்கோப் என்னும் கருவியை செலுத்தி வயிற்றுக்குள் சென்ற பொருளை வெளியே எடுத்துள்ளனர்.

பாம்பு என்பதை கவனிக்காத பெண் மருத்துவர் ஒருவர், வயிற்றினுள் காணப்பட்டது 4 அடி நீள பாம்பு என்பதை உணர்ந்ததும், பதறி பின்வாங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!