வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் 40வது நினைவு

வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் தமிழுக்கும், சைவத்திற்கும் அரும் பணியாற்றிய தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம், வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள அடிகளாரின் உருவசிலைக்கு முன்பாக இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டு மலர்தூவி அஞ்சலி நிகழ்தப்பட்டதுடன் தமிழருவி சிவகுமாரன், அடிகளார் தொடர்பான நினைவுப் பேருரை ஒன்றை நிகழ்த்தினார்.

வவுனியா நகர சபையின் உப நகரபிதா சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நகர சபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராஜா, சு.காண்டீபன், எஸ்.சுமந்திரன், தமிழ் விருட்சம் அமைப்பினர், பொது அமைப்புகள் மற்றும், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!