நாட்டில் ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி

நேற்று மாத்திரம் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவரும் உள்ளடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

33 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 868 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தொற்றுக்கு உள்ளான 169 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 26 ஆயிரத்து 111 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!