அநுரத்த சம்பாயோவிற்குப் பிணை!

சிறைச்சாலை கைதிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அநுரத்த சம்பாயோ உள்ளிட்ட 4 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு நீதவான் ரஞ்சித் ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய அநுரத்த சம்பாயோ, 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய 3 சிறைச்சாலை காவலர்களர்களும் 6 லட்சம் பெறுமதியான 2 சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடு செல்ல அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் மாதாந்தம் 2 முறை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!