20 ஆவது திருத்தம் – சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுப்படுத்தப்பட வாய்ப்பு

20வது திருத்தத்தின் நகல் வடிவம் சட்டமா அதிபரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சம்மதம் வழங்கினால் அதன் பின்னர் நகல்வடிவத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சரவை அனுமதி வழங்கினால் அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20வது திருத்தத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கான விசேட பதவி எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 20வது திருத்தத்தின் மூலம் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

20வது திருத்தமானது 19வது திருத்தத்தின் சில அம்சங்களையும் 18வது திருத்தத்தின் சில அம்சங்களையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!