ரணில் விக்ரமசிங்கவிடம், 4 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று காலை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகினார்.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக, அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையான அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் என பலரிடம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசமும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று ஆஜராகினார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!