மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் ஊடாக இந்த பாடசாலை கற்றல் வள நிலையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் த.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கல்வி பணியக உதவி மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.(சி)