இனவாதம் காரணமாகவே கூட்டமைப்பு ஆசனங்களை இழந்தது : கெஹெலிய

தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது இனவாத நடவடிக்கைகள் காரணமாகவே பொதுத்தேர்தலில் பல ஆசனங்களை இழந்தது என அமைச்சா கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் 16லிருந்து பத்தாக குறைவடைந்துள்ளதால் அவர்களது திட்டங்கள் வீணாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பகுதிகளையும் சமமாக அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

வடபகுதி மக்களுக்கு குடிநீரும், விவசாயத்துக்கு நீரும் உரங்களும் சிறந்த சுகாதார கல்விவசதிகளும் தடையற்ற மின்சாரவசதிகளும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!