வசந்த் அன் கோ நிறுவனர் வசந்தகுமார் காலமானார்!!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் வசந்த் அன் கோ நிறுவனருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக இன்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று மாலை 7 மணியளவில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் வசந்தகுமார் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்இ அவரது உயிரிழப்புக்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!