யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வீட்டின் மீது வாள்வெட்டுக்குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. தாக்குதலில், வீட்டின் முன்பாக நின்ற மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டு கேற் என்பன வாளால் வெட்டி துண்டாடப்பட்டுள்ளன.

இன்று காலை இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

6 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழுவினர் 3 மோட்டார் சைக்கிளில், சென்று வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற
யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!