மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அழைப்பாணை!

பதில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், விசேட விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போதே, அவர்களுக்கு குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோவினால் பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, குறித்த நால்வருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!