பாராளுமன்றம் வருகிறார் உதித்த லொக்குபண்டார!

ராஜபக்‌ஷக்களின் உறவினரான உதித்த லொக்குபண்டார விரைவில் பாராளுமன்றம் வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினரொருவர் பதவி துறக்கவுள்ளார் எனவும், அவர் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார் எனவும் அரச உயர்மட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட உதித்த லொக்கு பண்டார விருப்பு வாக்கு பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கின்றார்.

எனினும், மொட்டு கட்சிக்கு 6 ஆசனங்களே கிடைக்கப் பெற்றன.

எனவே, எம்.பியொருவர் பதவி துறந்தால் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவருக்கு சபைக்கு வருவதற்கான வாய்ப்பு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!