அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை : கமால்

மனித உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தும் போர் அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை ஒன்றினை செயற்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டிவில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சில் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராகக் கடமைகளை ஏற்றுக்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாதுகாப்பு, இராணுவம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் என்பன ஒன்றாக ஒருங்கிணையும் போதே மக்கள் வாழ ஒரு அமைதியான சூழலை உருவாக்க முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ எனும் தூரநோக்கு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் ஆற்ற வேண்டிய தேவை உள்ளதாகவும் அவற்றினை அடைவதற்கு ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவேண்டிய கடப்பாடு காணப்படுவதாகவும் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன இதன் போது தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!