அரசு தீர்மானம் – பொருளாதாரத்தை வழமை நிலைக்குத் திருப்ப நடவடிக்கை

உற்பத்தி மற்றும் சேவையில் ஈடுபடுவோருக்கு நிதி ரீதியான ஊக்குவிப்புக்களை வழங்கி அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நுகர்வோர், தொழிலாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வரிசெலுத்துவோர் உள்ளிட்ட பொருளாதாரத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பொருத்தமான வகையில் பரந்துபட்ட ஒழுங்குவிதிகளைக் கொண்டதும் செயற்திறன் மிக்கதுமான வரிக்கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு கடந்த வருடம் டிசம்பர் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.

இந்நிலையில் உற்பத்தி மற்றும் சேவையில் ஈடுபடுவோர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் குறைந்த வருமானத்தைக் கொண்டவர்கள், சுற்றுலாத்துறைசார் தொழில்முயற்சியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச்செய்யும் அனைத்துத் தரப்பினரையும் நிதி ரீதியில் ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

அதன்படி தொழில்முயற்சியாளர் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையைத் தளர்த்தும் நோக்கில் நிதிச்சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இவற்றுடன் தொடர்புடைய சட்டங்களின் சாதகமான திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!