வெளிநாடுகளில் சிக்கியிருந்த 186 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 186 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மாலைத்தீவு மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து 186 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்
இதற்கமைய, அவுஸ்திரேலியாவில் இருந்து சிறிலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்-609 எனும் சிறப்பு விமானம் ஊடாக 160 இலங்கையர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதேபோன்று, மாலைத்தீவின் மலே விமான நிலையத்தில் இருந்து சிறிலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்- 102 எனும் விசேட விமானம் ஊடாக 26 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!