ஆவா வினோதன் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில், பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக, 12 பியர் ரின்களுடன் தயாராகிய போது, ஆவா வினோதன் உள்பட 6 பேர், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் 6 பேரும், மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘மானிப்பாய் – பொன்னாலை வீதி, துர்க்கா மில் பகுதியில், ஆவா வாள்வெட்டுக் குழுவின் வினோதன் உட்பட 6 பேர் கூடியுள்ளனர் என, இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பிரகாரம், இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ஆவா வினோதன் உள்ளிட்ட 6 பேர், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

ஆவா வினோதன் இணுவிலைச் சேர்ந்தவர் என்பதுடன், ஏனைய 5 பேரும் கைதடியைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் தொடர்பில், மானிப்பாய் பொலிஸில், வழக்கு நிலுவைகளோ அல்லது பிடியாணையோ இல்லை.

எனினும் சந்தேக நபர்களின் சந்தேகமான நடமாட்டத்தால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தொடர்பில், ஏனைய பொலிஸ் நிலையங்களில், வழக்கு நிலுவைகள் உள்ளனவா? என, விசாரணைகள் நிறைவடைந்ததும், அவர்களை பிணையில் விடுவிப்பது தொடர்பில் ஆராயப்படும்.

இதேவேளை, வாள்வெட்டுக் குழு சந்தேக நபர்களுக்கு, நீதிமன்றில் பிணையாக கையொப்பமிட்ட ஆண் ஒருவரும் பெண் ஒருவரும், தலா 3 வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என, மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், பீடிக்குள் கஞ்சா போதைப்பொருளை மறைத்து நுகர முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர், மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!