முன்னாள் ஜனாதிபதியிடம் 10 மணிநேர விசாரணை!

கடந்த 2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம், இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல் குறித்து ஆராயும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம், இன்று 10 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இன்று காலை, கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற அதிகாரிகள், வாக்குமூலத்தை பதிவு செய்த நிலையில், இரவு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல் விசாரணை தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னிலையாகுமாறு, ஆணைக்குழு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில், தமது இல்லத்திற்கு வருகை தந்து, வாக்குமூலம் பதிவு செய்யுமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆணைக்குழுவிடம் கோரியிருந்தமைக்கு அமைவாக, இன்று அவரது இல்லத்திற்கு சென்ற அதிகாரிகள், வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!