நாளை மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம், நாளை காலை 9.30 மணிக்கு, கூடவுள்ள நிலையில், இடைக்கால கணக்கு அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான கால எல்லைக்கான, இடைக்கால கணக்கு அறிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக, வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து, சமர்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம், நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

குறித்த இரண்டு தினங்களிலும், காலை 9.30 முதல் மாலை 6.30 வரை, இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் பொது மக்கள் பார்வைக்கூடம், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!