நுவரெலியாவில், லிந்துல – அக்கரபத்தனை வீதி ஒரு வாரத்திற்கு மூடல்!

நுவரெலியாவில், லிந்துல – அக்கரபத்தனை ஊடான வீதி, ஒரு வார காலத்திற்கு மூடப்படுவதனால், வாகன சாரதிகள், மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டும் என, நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

லிந்துல – டயகம ஊடான பிரதான வீதியில், மன்ராசி நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள பாலத்தல், திருத்த வேலைகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக, நேற்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் தெரிவித்தார்.

குறித்த வீதியின் ஊடாக, அக்கரபத்தனைக்கும் டயகமவுக்கும் இடைப்பட்ட பகுதியில், 29 இற்கும் மேற்பட்ட தோட்டங்கள் உள்ளன.

இந்த பகுதியில் வாழும், சுமார் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், லிந்துல, தலவாக்லை, நுவரெலியா, கண்டி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு, நாளாந்தம் லிந்துல – அக்கரபத்தனை வீதியையே பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், வீதி மூடப்படுவதனால், லிந்துல பகுதியில் இருந்து டயகம செல்லும் வாகனங்கள்;;, ஹோல்புறுக் பச்சபங்கள வீதியையும்;;, ஹட்டன் போடைஸ் ஊடான வீதியையும், மாற்று வீதிகளாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில், தற்போது பார ஊர்திகள் செல்வதற்கு, நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகள் மாத்திரம், இடைக்கிடையே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தலவாக்கலையில் இருந்து செல்லும் பேருந்துகள் மற்றும் டயகம பகுதியில் இருந்து செல்லும் பேருந்துகள், மன்ராசி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, இரு பகுதியிலும் இருந்து செல்லும் பொது மக்கள், பாலத்தை கடந்து தங்களது பயணத்தை தொடர முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!