வவுனியாவில் விதை நெல் விற்பனை ஆரம்ப நிகழ்வு!

வவுனியா விதை உற்பத்தியாளர் சம்மேளத்தினால் விவசாயத் திணைக்களத்தின் விதிமுறைகளிற்கு அமைவாக, உற்பத்திசெய்யப்பட்ட விதை நெல் விற்பனை ஆரம்ப நிகழ்வு வவுனியாவில் இன்று இடம்பெற்றது. சம்மேளனத்தின் தலைவர் சி.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன விற்பனை நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார்.

குறித்த விதை நெல் வகைகள் மாவட்டத்திற்குள்ளேயே உற்பத்திசெய்யப்பட்டு, விவசாய திணைக்களத்தால் அதன் முளைதிறன் பரிசோதிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

அந்தவகையில் பிஜீ-352, பிஜீ-360, ஏரி-362, பிடபிள்யு-367, பிஜீ-406, டிpஜீ-450 இனங்களை கொண்ட விதை நெல்வகைகள் விற்பனைக்காக இருப்பில் உள்ளதுடன், 20 அரை கிலோ அளவு கொண்ட நெல்மூடை 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மாகாண நீர்ப்பாசன பிரதிப்பணிப்பாளர் ந.சிறிஸ்கந்தராயா, கமநல அபிவிருத்தி உதவிஆணையாளர் இ.விஜயகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன், பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தம் மற்றும் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!