டிக்கோயாவில் திருட்டில் ஈடுபட்டவர் கைது!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா நகரப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில், பணம் மற்றும் ஒரு தொகை தொலைபேசி மீள் நிரப்பும் அட்டைகளை திருடிச் சென்றவர், சீ.சீ.ரிவி காணொளிப் பதிவின் உதவியுடன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை வேளையில் குறித்த வர்த்த நிலையத்தித்தின் உரிமையாளர் இல்லாத சமயம், உள்நுழைந்த திருடன், 30 ஆயிரம் ரூபா பணம், ஒரு தொகை தொலைபேசி மீள ;நிரப்பும் அட்டைகளை திருடிச் சென்றுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில், கடை உரிமையாளர் முறைப்பாட்டினை பதிவு செய்தார். முறைப்பாட்டின் அடிப்படையில், வர்த்தக நிலையத்துக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரிவி காணொளி பதிவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்த ஹட்டன் பொலிஸார், சாமிமலை மனிலு தோட்டப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.

இதன்போது சந்தேக நபரால் திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!